Advertisment

பப்ஜி விளையாடுவோர் கவனத்திற்கு... உயிரை குடிக்கும் 'BATTLEGROUNDS'

மத்திய பிரதேசத்தில் மொபைல் போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேமை விளையாடிய சிறுவன் நெஞ்சு வலியால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

student passed away after continuously playing pubg for hours

மத்திய பிரதேசத்தில் உள்ள நீமூச் நகரத்தை சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவன் ஃபர்கான் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மொபைல் போனில் பப்ஜி விளையாடியுள்ளார். தொடர்ந்து தோல்வியடைந்த அந்த சிறுவன் வெற்றிக்காக 5 மணி நேரத்திற்கு மேலாக விளையாடியுள்ளான். தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த அந்த சிறுவன் திடீரென நெஞ்சு வழியால் துடித்து மயங்கி விழுந்துள்ளான்.

Advertisment

இதனையடுத்து அவனது பெற்றோர் ஃபர்கானை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவனது நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவன் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஃபர்கானின் இறப்பு குறித்து பேசிய அவரது தந்தை, ஃபர்கான் தனது மதிய உணவை உண்ட பின்பு தொடர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், மயக்கமடைவதற்கு முன் மிகவும் பதற்றத்துடனும், ஆத்திரத்திலும் இருந்த ஃபர்கான், மற்ற ஆட்டக்காரர்களிடம் மிகவும் கூச்சலிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களிடம் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் தீமைகளை பெரியவர்கள் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அதன் தீமை புரியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான விழிப்புணர்ச்சியை பள்ளிகளும், பெற்றோர்களும் தான் ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

MadhyaPradesh pubg
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe