
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நடைபெற்ற தேர்வில் மோசடி செய்ததாகக் கூறி இரண்டு குழ மாணவர்கள் நேற்று முன் தினம் (19-02-25) வாக்குவாதம் செய்துள்ளனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது. மறுநாள், தகராறு தீவிரமடைந்த துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டன. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில், பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.
கொல்லப்பட்ட மாணவரின் குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நெடுஞ்சாலை நடுவே தீ வைத்து எரித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.