Advertisment

ஐஐடியில் மாணவி தற்கொலை; தொடரும் மரணங்கள்!

Student  lost their life at Kanpur IIT

அண்மைக் காலங்களாக ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை ஹைதராபாத், கான்பூர் எனத் தொடர்ந்து ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதனைத் தடுக்க ஐஐடி நிர்வாகம் பல முன்னெடுப்புகளை எடுத்தாலும், தற்கொலைகள் மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் ஐஐடியில் மாணவி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

கான்பூர் சனிகவான் பகுதியைச் சேர்ந்த பிரகதி கர்யா(28) என்ற மாணவி ஐஐடியில் புவி அறிவியலில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். இந்த நிலையில்தான் புதன்கிழமை இரவு தந்து விடுதி அறையில் பிரகதி கர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் கதவைஉடைத்துகொண்டு உள்ளே நுழைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாணவியின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அதில் மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று பிரகதி கர்யா எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைது செய்தனர். ஆனால், தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை தெரியாததால், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் ஐஐடியில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது மூன்றாவது தற்கொலை சம்பவம் நடந்துள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

iit
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe