Advertisment

பள்ளியை கட் அடித்துவிட்டு பெற்றோரிடம் கடத்தப்பட்டதாக நாடகமாடிய மகன்!

தன்னை யாரோ கடத்திவிட்டதாக பெற்றோருக்கு போன் செய்து சொந்த மகனே மிரட்டிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கு மாணவனான பிரேம் குமாரை கடத்தி வைத்துள்ளதாகவும், பணம் கொடுத்தால் அவரை விட்டுவிடுவதாகவும் அவருடைய பெற்றோருக்கு முகப்புத்தகம் வாயிலாக நேற்று மாலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களுடைய பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

Advertisment

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அந்த மாணவனின் பெற்றோருக்கு குறுந்தகவல் வந்த தொலைபேசியை ட்ராக் செய்து அதனுடைய முகவரிகை கண்டுபிடித்துள்ளனர். இதனால் உடனடியாக முகவரியில் உள்ள அட்ரஸ்க்கு போய் பார்த்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. யார் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டதோ அவரே அங்கு இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலிசார் அந்த மாணவனிடம் அன்பாக விசாரித்துள்ளனர். காலையில் இருந்து பள்ளிக்கு போகாமல் ஊர் சுற்றியதால் அதில் இருந்து தப்பிப்பதற்காக தான் பொய் சொன்னதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் மாணவனுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Advertisment
Kidnapping
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe