சிகரெட் பிடித்த விஷயத்தை அப்பாவிடம் சொல்வதாக கூறியதால் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜக்தியல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சஞ்சீவ் குமார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியின் மூலமாக சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர் புகைப்பிடித்துள்ளார்.

Advertisment

இதனை பார்த்த அவருடைய ஆசிரியர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் விஷயத்தை உன் அப்பாவிடம் சொல்ல உள்ளதாக அந்த மாணவனிடம் தெரிவித்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன், அன்று இரவே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.