Advertisment

செல்போன் வாங்கித்தராத ஆத்திரத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் செய்த செயல்...

tsrh

Advertisment

ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் செல்போன் வாங்கிக் கொடுக்க தாமதம் செய்த காரணத்தால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்த அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன் தனது பெற்றோரிடம் செல்போன் வாங்கித்தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். அந்த மாணவனின் தந்தை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக சிறிது காலம் கழித்து போன் வாங்கி தருவதாக அவர் கூறியுள்ளார். இதனால்மனமுடைந்த அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்கள் கோபமாக பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்து அவரது பெற்றோர்அந்த மாணவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

student cellphone Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe