Advertisment

என்.டி.ஏ வளாகத்தில் நுழைந்த மாணவர் அமைப்பு; தடியடி நடத்திய போலீசார்

Student body entering NDA campus; Police batoned

Advertisment

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து நீட் முறைகேடுகளைகண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் இன்று காலை முதலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் தடுப்புகளை வைத்து போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளே புகுந்த போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது. நீட் முறைகேட்டை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் மாணவர் அமைப்பு மீது தடியடி நடத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனத்தைத்தெரிவித்துள்ளது.

Delhi police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe