Advertisment

கல்லூரி தோழிகளின் குளியலறை வீடியோக்களை சமூக வலைதளத்தில் பரப்பிய மாணவர் கைது

​    ​bangaluru

Advertisment

பொறியியல் பட்டதாரி மாணவர் ஒருவர், தனது வகுப்பு தோழியின் உதவியுடன் மாணவிகள் குளியலறை வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார பகுதியில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த சித்தார்த் என்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் தங்கியுள்ளான். இவன் தன்னுடன் படிக்கும் சக தோழியுடன் பழகியுள்ளான்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சித்தார்த்துடன் ஒருநாள் தன்னையே மறந்து பேசிக்கொண்டிதார் அந்த மாணவி. அந்த நேரத்தில் சித்தார்த்தின் பேச்சில் மயங்கிய அந்த மாணவி, தனது நிர்வாண வீடியோவை சித்தார்த்துடன் பகிர்ந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட சித்தார்த், அதனை வெளியில் விடக்கூடாது என்றால், பெண்கள் விடுதியில் உள்ள குளியலறையில் தான் கொடுக்கும் ஸ்பை கேமரா வைத்து, அதில் பதிவானதை தனக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளான்.

இந்த செயலை செய்ய அந்த மாணவிக்கு விருப்பம் இல்லை, அதே நேரத்தில் தனது வீடியோ வெளியாகிவிடும் என்ற பயத்தில், பெண்கள் விடுதியில் மாணவிகள் குளிக்கும் அறைகளில் அந்த கேமராவை வைத்து, பின்னர் அதனை எடுத்து சித்தார்த்திடம் கொடுத்துள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

சித்தார்த் இதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதே கல்லூரியில் படிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மாணவி சமூக வலைதளத்தில் தனது நிர்வாண படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் அது ஒரு போலி கணக்கு என்று தெரிய வந்தது. மேலும் தேடுகையில் தனது குளியல் வீடியோக்களும் அதில் இருந்ததை கண்டார்.

இதுகுறித்து காவல்துறையை அணுகி புகார் ஒன்றை கொடுத்துள்ளார். புகாரை பெற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹார போலீசார் அந்த மாணவன் படிக்கும் கல்லூரிக்கு விவரத்தை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவன் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதுடன், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.

girls videos bathroom spreading arrested student
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe