உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விடுமுறை வேண்டி பள்ளி முதல்வரிடம் விடுப்பு விண்ணப்பத்தை வழங்கியுள்ளார். அதில் நான் இறந்துவிட்டதால் தயவு கூர்ந்து விடுப்பு அளியுங்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.ஆனால், உண்மையில் சம்மந்தப்பட்ட மாணவரின் பாட்டி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த மாணவர் அரை நாள் விடுமுறை பெற லீவ் லட்டரை அளித்துள்ளார். கவனக்குறைவால் பாட்டி இறந்துவிட்டார் என்பதற்கு பதிலாக, நான் இறந்த விட்டேன் என்று எழுதியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/xccc.jpg)
இந்த பிழையை கவனிக்காத பள்ளி முதல்வர், அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு மாணவனுக்கு விடுப்பை அளித்துள்ளார். இந்த லீவ் லெட்டர் சம்பவம் வெளியில் கசிந்து பள்ளி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow Us