ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

09:40 PM Jan 21, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT


மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், புராரி பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில், இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து 50 - நாளை கடந்து விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் வரும் குடியரசு நாளில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த முடிவுசெய்துள்ளனர். வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறினாலும், திட்டமிட்டபடி டெல்லியில் ஜனவரி 26ல் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும், 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT