Skip to main content

போராட்டம் தொடரும் - பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் விவசாயிகள் முடிவு!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

gh

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அந்தவகையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ' என்ற மாபெரும் பேரணி, பல தடைகளைக் கடந்து டெல்லி சென்றடைந்தது. டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், அமைதியான முறையில் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து ஆறாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், இன்று மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மீண்டும் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்