struggle against Amit Shah's visit ... Balloon seller arrested!

புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலமாக நேற்று (23/04/2022) இரவு 09.00 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தனர். புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் அமித்ஷா வருகையை எதிர்த்து புதுச்சேரியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். அதேபோல் அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் பறக்கவிடதிட்டமிட்ட பலூன் விற்பனையாளர் ஜெய்சங்கர்என்பவரும்கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment