மத்திய அமைச்சர் மகனின்கார்மோதி 8 விவசாயிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல்உத்தர பிரதேசத்தில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண்சட்டங்களுக்கு எதிராகஉத்திர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்டநாட்களாகத்தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம்லக்கிம்பூரில்விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில்லக்கிம்பூர்பகுதியில், உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வரும் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சருமானஅஜய்மிஸ்ராவின்மகன் அரசு விழாவில்பங்கேற்கச்சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி மத்திய இணை அமைச்சர் மகனின் காரை முற்றுகையிட முயன்றுள்ளனர். அப்பொழுது அமைச்சரின் மகன் வந்த வாகனம் மோதி ஏராளமானவிவசாயிகள்காயமடைந்தனர். இந்த விபத்தில் முதற்கட்டமாக இரண்டு விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது இந்த விபத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
'சம்யுக்தா கிஷான்மோர்ச்சா'என்றஅமைப்பு அதன்அதிகாரப்பூர்வட்விட்டர்பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தில், ஆத்திரத்தில் மத்திய இணை அமைச்சர் மகனின் காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் அசாதாரண சூழல் நிலவ, பாதுகாப்பிற்காகபோலீசார்குவிக்கப்பட்டனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு நடந்த இந்த வன்முறை நிகழ்வு குறித்த தகவல்கள் வெளியான நிலையில், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வன்முறை நிகழ்ந்தலக்கிம்பூர்பகுதிக்குக்காங்கிரஸின் பிரியங்கா காந்தி நாளைசெல்லியிருக்கிறார்என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர்அஜய்மிஸ்ராவின்மகன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு விவசாயிஇறந்ததாகக்குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்அஜய்மிஸ்ராவைபதவி நீக்கவும், அவரதுமகனைக்கைது செய்யவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இணை அமைச்சர் மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர்அஜய்மிஸ்ராகொடுத்துள்ள விளக்கத்தில், வன்முறை நிகழ்ந்தலக்கிம்பூரில்தனது மகன் இல்லை. அதற்கானவீடியோஆதாரம் தங்களிடம் உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்எனத்தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்துவரும் நிலையில், ''லக்கிம்பூரில்நிகழ்ந்த இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. இது கண்டனத்திற்குரியது'' என மேற்கு வங்க முதல்வர்மம்தா பானர்ஜிகண்டனத்தைப்பதிவு செய்துள்ளார்.