Advertisment

மட்டன் பீஸை எடுத்து சென்ற நாயை கத்தியை வீசி கொலை செய்த இறைச்சி கடைக்காரர்!

மராட்டிய மாநிலத்தில் மட்டன் துண்டை எடுத்து சென்ற நாயை கடைக்காரர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் சந்த்ரபூர் பகுதியில் கறிக்கடை வைத்திருப்பவர் சந்திரகாந்த். இவர் அப்பகுயில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கறிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலை வழக்கம் போல் ஆட்டிக்கறியை அவர் பீஸ் போட்டுக்கொண்டிருக்கும் போது அந்த வழியாக ஒரு நாய் வந்துள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கடையில் இருந்த ஒரு மட்டன் பீஸை எடுத்துக்கொண்டு நாய் ஓடியுள்ளது. இதநால் அதிர்ச்சி அடைந்த ஓனர் நாயை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார்.

Advertisment

நாய் மிகவும் வேகமாக ஓட, கோபமான அவர் தன்னுடைய கையில் இருந்த மட்டன் வெட்டும் கத்தியை நாயை நோக்கி குறிப்பார்த்து எறித்துள்ளார். வயிற்றுப்பகுதில் குத்துப்பட்ட அந்த நாய் மட்டன் பீஸை போட்டுவிட்டு அங்கிருந்து சில அடிகள் ஓடியபோது தடுமாறி கீழே விழுந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது அந்த நாய் இறந்து போய் இருந்தது. இந்த சம்பவம் அனைத்தையும் இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மட்டன் கடைக்காரருக்கு தண்டனை தரவேண்டும் என்று ஒருசாரார் கூறிவருகிறார்கள்.

Advertisment
dog
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe