Advertisment

பதஞ்சலி நிறுவனத்தின் கரோனா மருந்தின் விளம்பரத்தை நிறுத்த ஆயுஷ் அமைச்சகம் உத்தரவு...

jh

Advertisment

கரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய, உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்துவரும் சூழலில், இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் மூலம்இதற்கான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டறிந்துள்ளதாக பதஞ்சலி நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த மருந்தை கரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்துச் சோதித்து பார்த்ததில் ஐந்து முதல் பதினான்கு நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மருந்து இன்று முதல் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனாவை குணப்படுத்தும் எனக்கூறி பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்திய மருந்தை விளம்பரம் செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.

Patanjali
இதையும் படியுங்கள்
Subscribe