Advertisment

மருத்துவர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்குதல்... வலுக்கும் கண்டனங்கள்...

கரோனா பரிசோதனைக்காக வந்த மருத்துவர்களை மக்கள் கற்களைக் கொண்டு தாக்கியுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Stones thrown on doctors in Indore when they came for corona testing

உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.9 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், 47,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் இந்த வைரசால் 1965பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து குணமடைந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வந்த மருத்துவர்களை மக்கள் கற்களைக் கொண்டு தாக்கியுள்ள சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மத்தியப்பிரதேசத்தின் தாத் பட்டி பக்கால் பகுதியில் நேற்று இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் பணிக்காக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த மக்கள் மருத்துவர்களைக் கடுமையாகத் திட்டியதுடன் அவர்கள் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை எதிர்பாராத மருத்துவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

பின்னர் இது தொடர்பாகத் தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். கரோனா பரவல் காரணமாக ஏற்கனவே இப்பகுதியில் 54 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், இந்த கல்வீச்சு சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. கரோனா ஆய்வுப்பணிக்காக வந்த மருத்துவர்கள் மீது மக்கள் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ள இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

MadhyaPradesh corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe