Advertisment

விதிகளைப் பின்பற்றச் சொன்ன காவலர்களுக்கு நேர்ந்த கொடுமை...

ஊரடங்கு காரணமாகக் கடைகளை மூடச் சொன்ன காவலர்கள் மீதுஅங்கிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அசாம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Stones pelted at police personnel in assam

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,341 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1,33,057 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 800 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 66லிருந்து 79 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கடைகளை மூடச் சொன்ன காவலர்கள் மீது கடைக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் போங்கைகானில் உள்ள புதிய பங்காய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாவ்லகுரி போடி பஜாரில் கடைகள் விதிமுறைகளை மீறித் திறந்திருந்தால் அவற்றை மூடும்படி அங்கு வந்த காவலர்கள் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியிலிருந்தவர்கள் காவலர்கள் மீது கற்களை வீசி தாக்கி விரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assam corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe