குஜராத் மாநிலத்தில் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தபோதிலும் தலித் இளைஞர் திருமண ஊர்வலத்தில் கல் எரிந்து தாக்கிய வேற்று சமூகத்தினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சரிஃப்தா கிராமத்தில் நேற்று காலை 11 மணியளவில் ஆகாஷ் குமார் கொயிட்டியா என்ற ஆர்மி வீரரின் திருமணம் நடைபெற்றது. பெங்களூருவில் பயிற்சி பெற்று மீரட்டில் பணிபுரியும் ஆகாஷ், தனது திருமணத்திற்காக விடுமுறையில் இருக்கிறார்.
அந்த கிராமத்தில் தாக்கூர் கோலி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகாஷ் குமார் திருமணத்தில் குதிரையின் மீது சவாரி செய்து ஊர்வலம் வரக்கூடாது, அப்படி வந்தால் திருமண நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்துவோம் என்று முன்பே எச்சரிக்கை செய்துள்ளனர். இதனால் ஆகாஷ் முன்னெச்சரிக்கையாக போலீஸில் புகார் ஒன்றை அளித்து பாதுகாப்பு கோரி இருந்தார். போலீஸும் அவருடைய திருமண ஊர்வலத்திற்கு 7 போலீஸை அனுப்பி வைத்தது.
போலீஸ் பாதுகாப்பு இருந்தும் அந்த சமூகத்தை சேர்ந்த சிலர் கல்லை எடுத்துக்கொண்டு ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மேல் எரிய தொடங்கிவிட்டனர். இதனால் போலீஸ் மணமகனை அங்கிருந்து அப்புறப்படுத்தி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர். மணமகனின் சொந்தக்காரர்கள் மூவருக்குதான் தீவிரமாக காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 50லிருந்து 60 போலீஸார் வரை அந்த கிராமத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். அதன்பின் முழு பாதுகாப்புடன் மணமகனை மணமகளின் கிராமத்திற்கு அழைத்து சென்று திருமணத்தை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் பதினொரு பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது.