Advertisment

சீதை சிறைப்பட்ட இடத்திலிருந்து அயோத்திக்கு வரும் 'கல்'!

stone from sita eliya

Advertisment

கடந்த 2019 ஆண்டு வெளியான அயோத்தியா நிலவழக்கின்இறுதித் தீர்ப்பதில் உச்சநீதிமன்றம், அயோத்தியில் இராமர்கோயில் கட்டலாம் என உத்தரவிட்டது. இதனையடுத்துகடந்த ஆண்டு அயோத்தி இராமர்கோயிலுக்கு இந்தியப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இக்கோயிலின் கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கையில், 'சீதா எலியா' என்ற ஒரு இடமுள்ளது. இங்குதான் சீதை சிறை வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சீதா எலியாவில்சீதைக்கென்றுஒரு கோயிலுமுள்ளது. இந்தநிலையில் இராமர் கோயிலின் கட்டுமானத்திற்காக, சீதா எலியாவிலிருந்துகல் ஒன்று கொண்டுவரப்படுகிறது. இந்த கல் இராமர்கோயிலின்கட்டுமானத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்த தகவலைப் பகிர்ந்துள்ள இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம், "சீதா எலியாவில்இருந்து இராமர்கோயிலுக்குக் கொண்டுவரப்படும் கல், இந்திய- இலங்கை உறவின்வலுவான தூணாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளது.

srilanka Ayodhya Ram mandir
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe