Advertisment

வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

Stone pelting on Vande Bharat train

பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisment

கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளிவாயிலாகத்துவக்கி வைத்தார். ஹவுராவில் நடைபெற்ற ரயில் துவக்க நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

மேற்கு வங்கத்தில் ஹவுரா முதல் ஜல்பைகுரி வரை செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் மால்டா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தசம்பவத்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்த தாக்குதல் குறித்து குமார் கஞ்ச் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe