Stone pelting on the buses... Police gathering

Advertisment

திமுக எம்பி ஆ.ராசாவின் பேச்சு இந்துக்களை அவமதித்ததாக கூறி இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் இந்து அமைப்புகள் சார்பில் புதுச்சேரியில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரியில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை இயங்க முடியாத சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியின் முக்கியபகுதிகளில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்புடன் மிக குறைந்த எண்ணிக்கையில் தமிழக அரசு பேருந்துகள்இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வில்லியனூர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றது. இதனால் பேருந்தின் முகப்பு கண்ணாடிகள் முழுவதும் உடைந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.