நடந்து முடிந்த மக்களவை தேர்தலுடன், நான்கு மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பிஜு ஜனதா தள கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஐந்தாவது முறையாக ஒடிஷா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல மாநில முதல்வர்களும், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் உள்ளஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்தின் நிறுவன சேர்மன் அனில் அகர்வால் நவீன் பட்நாயக்கிற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

anil agarwal

அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "5-வது முறையாக முதல்வராக பதவியேற்று உள்ள நவீன் பட்நாயக்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் புதிய தொடக்கத்தில் நீங்கள் பல மகத்தான சாதனைகள் புரிய,புதிய உயரத்தை, இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்" எனப் பதிவிட்டுள்ளார். அதே போல் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசிற்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.