விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றனர்.

Advertisment

sterling biotech

அந்த வரிசையில் குஜராத்தின் வடோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஸ்டெர்லிங் குழும நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின், சேத்தன் என்ற சகோதரர்கள் இந்திய வங்கிகளில் 8,100 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தப்பியோடினர்.

Advertisment

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பினாமி பெயரில் தொடங்கி அதன்மூலம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு அவர்களுக்கு பினாமி நிறுவனங்கள் அமைக்க அவர்களது மைத்துனரான ஹிதேஷ் படேல் உதவியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

இந்நிலையில் ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த ஹிதேஷ் படேலுக்கு கடந்த மாதம் ரெட் நோட்டீஸ் கொடுத்தது அமலாக்கத்துறை. இதனை தொடர்ந்து இன்டர்போல் உதவியுடன் ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளிகளான நிதின், சேத்தன் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் தலைமறைவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.

Advertisment