கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்திலுள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளது. இந்த அணையில் ரூ. 1200 கோடி செலவில் காவிரி தாய்க்கு 125 அடி உயர சிலை வைக்க வேண்டும் என்று இந்த கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இச்சிலை வளாகத்தில் அருங்காட்சியம், 360 அடி உயர் கண்ணாடி கோபுரம் இதன் வழியாக கே.ஆர்.எஸ் அணையின் முழுதோற்றத்தையும் பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிட்டுள்ளது. தனியார் அமைப்புகளின் பங்களிப்பின் மூலம் கர்நாடகா அரசு இத்திட்டத்தில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சிலையின் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.