உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் இல்லாததால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்..

Advertisment

statement about gorakhpur hospital incident

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், அங்கு பணியாற்றிய மருத்துவர் கபீல் கான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது குழந்தைகள் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவர் கபீல்கான் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணை அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, இந்த சம்பவத்துக்கு மருத்துவர் கபீல் கான் காரணமல்ல எனவும், மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைவாக இருக்கிறது என்று முன்கூட்டியே அவர் எச்சரித்ததோடு, சம்பவம் நிகழ்ந்த போது அவர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரே தனது சொந்த செலவில் உபகரணங்களை வாங்கி குழந்தைகளை காக்க போராடியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.