கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில் "மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த தேவையான நிதி ஒதுக்க வேண்டும். மருத்துவமனையில் ஆய்வகங்கள், தனிமை வார்டுகளை கூடுதலாக ஏற்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்கள், முக்கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்". இவ்வாறு சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சுற்றறிக்கையின் மூலம் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.