Advertisment

குடும்பத்தினருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கிய மாநில அரசு!

The state government has given leave to government employees to spend time with family!

Advertisment

அசாம் மாநிலத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட ஏதுவாக அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படுவதாகஅம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள்வரை அனைவருக்கும் சிறப்பு விடுப்பு வழங்குவதாக அசாம் மாநில முதலமைச்சர்ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். சிறப்பு விடுப்பு நாட்களைத் தொடர்ந்து வரும் ஜனவரி 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் ஏற்கனவே வார விடுமுறை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், பெற்றோர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடஇந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரத்தில், பெற்றோர் இல்லாத அரசு ஊழியர்களுக்கு இச்சலுகை கிடையாது என அசாம் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Assam government Holidays staff
இதையும் படியுங்கள்
Subscribe