ADVERTISEMENT

ஊரடங்கை மே 1 வரை நீட்டித்துக்கொண்ட மாநிலம்... அமைச்சரவையில் முடிவு!!!

05:13 PM Apr 10, 2020 | kalaimohan

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6761 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 512 பேர் குணமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT


இந்நிலையில் பஞ்சாபில் மே ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கான பேச்சுவார்த்தை ஒரிசாவை விட பஞ்சாபில்தான் முன்னதாக நடக்கவிருக்கிறது என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பின்பற்றப்படும் ஊரடங்கு நடவடிக்கையானது மே ஒன்றாம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT