பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிகளுக்கான தேர்வுகள் கடந்த மாத இறுதியில் நடைபெற்றது.

sbi cutoff

Advertisment

Advertisment

நாடு முழுவதும் உள்ள 8653 பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வுகளை லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக பொருளாதார ரீதியில் பின் தங்கிய பொது பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 28.5 என உள்ள நிலையில், எஸ்.டி பிரிவினருக்கான கட் ஆஃப் 53.75 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கான இடஒதுக்கீடு ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது பொது பிரிவினருக்கான கட்ஆஃப் மதிப்பெண்களும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதைபலருக்கும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.