உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சுமர்சிங் என்பவரின் மகள் லலிதாவுக்கு அப்பிளாஸ்டிக் அனீமியா (APLASTIC ANEMIA) என்ற இரத்தசோகை நோய் பாதிக்கப்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இது வரை சுமர்சிங் சுமார் 7 லட்சம் ரூபாயை செலவழித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகளின் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 10 லட்சம் தேவைப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சுமர்சிங்யிடம் தெரிவித்தது.

Advertisment

PRIME MINISTER NARENDRA MODI HELP FOR CHILD

இதனையடுத்து சுமர்சிங் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதினார். அதில் தனது மகள் அப்பிளாஸ்டிக் அனீமியா என்ற நோயால் பாதிக்கப்படுள்ளார் என்றும், மகளின் மேல் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்தார். எனவே மகளின் சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொண்டார். சுமர்சிங் கடிதத்தை பரிசீலித்த பிரதமர் அலுவலகம், பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

PRIME MINISTER NARENDRA MODI

Advertisment

அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி சிறுமியின் சிகிச்சைக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயை ஒதுக்குமாறும், அந்த தொகையை சிறுமியின் தந்தைக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டார். இதற்கு சிறுமியின் தந்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.