Starting a political party and getting involved in direct politics? - Prasanth Kishore's Twitter post is sensational!

Advertisment

உண்மையான எஜமானர்களாகிய மக்களை அணுகப் போவதாகப்பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில், பங்களிக்க வேண்டும் என்பது தனது தாகம். மக்களுக்கு உகந்த கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வு மிகுந்த பாதையில் பயணிக்கிறேன். பிரச்சனைகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மக்களை அணுக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சியைத் தொடங்கி நேரடி அரசியலில் ஈடுபடுகிறாரா என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

Advertisment

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணையும் திட்டம் தோல்வி அடைந்துள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த ட்விட்டர் பதிவு பல யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.