local body

வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

Advertisment

தமிழகத்தில் நடத்தபட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தள்ளிவைத்து கொண்டே செல்கிறார்கள். இத்தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு அரசியல் பின்னணி காரணங்கள் இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் இது தொடர்பான உடனடி தகவல் 10 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு வருகின்ற சனிக்கிழமை அன்று விசாரணைக்கு வருகின்றது.