Stadium roof collapse accident; 3 people lost their lives

Advertisment

தெலங்கானாவில் உள்விளையாட்டு மைதானத்தில் மேற்கூரை இடிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் மெயினாபாத்தில் உள்விளையாட்டு மைதானம் உருவாக இருந்தது. இந்த மைதானத்தை அமைக்க பல்வேறு தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று (20-11-23) இந்த மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய, பப்லு, சுனில் மற்றும் ஒரு நபர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இதன் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 14 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அந்த தொழிலாளர்களை மீட்டு அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விளையாட்டு மைதான மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.