Advertisment

பேருந்து, ஜீப் நேருக்கு நேர் மோதல்: சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த பயணிகள்...

எஸ்.ஆர்.எஸ் நிறுவன தனியார் சொகுசு பேருந்தும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

srs travels and jeep met with accident in andhra

ஆந்திராவின் கர்னூல் பகுதியை அடுத்த பெல்துர்த்தியில்ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு செல்லும்எஸ்.ஆர்.எஸ் பேருந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென ஒரு இருசக்கர வாகனம் சாலையை கடக்க முயன்றுள்ளது. அந்த வாகனத்தின் மேல் மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை திரும்பியுள்ளார். அப்போது அந்த இருசக்கர வாகனத்தின் மீது உரசியபடி அந்த பேருந்து எதிர் திசை நோக்கி சென்றுள்ளது.

Advertisment

அப்போது எதிர் திசையில் வந்த ஜீப் ஒன்று நேராக பேருந்தின் மீது மோதியுள்ளது. இரு வாகனங்களிலும் சேர்த்து 50 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 30 பேர் பலத்த காயமடைந்து கர்னூல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

accident Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe