Skip to main content

 ஸ்ரீசாந்துக்கு மீதான வாழ்நாள் தடை நீக்கம்                

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

                                                                                                                     
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.  மேலும்,  ஸ்ரீசாந்த் போட்டியில் பங்கேற்பது  குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.        

 

ஸ்ரீசாந்த் மீதான கேரள உயநீதிமன்றம் தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிசிசிஐ மேல்முறையீடு செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக  ஸ்ரீசாந்தின் மனு மீது 3 மாதத்தில் முடிவெடுக்க பிசிசிஐக்கு உத்தரவிடப்ப்ட்டுள்ளது.                

                                                                                                       

s

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி

Published on 23/10/2022 | Edited on 23/10/2022

 

 India's thrilling win against Pakistan

 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

 

20 ஓவர் உலகக் கோப்பைக்கான தொடரில் பாகிஸ்தான்- இந்தியா இடையிலான போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. மெல்போர்னில் இன்று நடந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. தொடக்கத்தில் பாகிஸ்தான் தடுமாறினாலும் கடைசி பத்து ஓவர்களில் 92 ரன்களை சேமித்ததால் மொத்தமாக 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159  ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 160 ரன்களை வைத்தது பாகிஸ்தான்.

 

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்ற நிலையில் 160 ரன்கள் எடுப்பது சிரமமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் பேட்டிங் செய்த இந்திய அணி 35 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. கடைசி பத்து ஓவரில் கிட்டத்தட்ட 120 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், இந்திய அணியின் விராட் கோலி 82 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அதேபோல் ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் எடுத்தார்.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷான் மசூத் 52 ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.

 

 

Next Story

இறுதி போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி!

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

 Chennai team advanced to the final!

 

துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், ஐபிஎல் முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.

 

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. சென்னை அணியில் ஜோஷ் ஹஸில்வுட் 2 விக்கெட்டையும், ஜடேஜா மொயீன் அலி, பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.