Skip to main content

'புர்கா' அணிவதற்குத் தடை; இஸ்லாமிய பள்ளிகள் மூடல்! - அரசின் முடிவால் இலங்கையில் பரபரப்பு!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 

BURQAS

 

கடந்த 2019 ஆம் ஆண்டு, இலங்கையில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்கள் புர்கா அணிவதற்குத் தடை விதித்தது இலங்கை அரசு. பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது.

 

இந்தநிலையில், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி பெண்கள் புர்கா அணிவதை நிரந்தரமாகத் தடை செய்யும் முடிவில், இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்ததும் புர்கா அணிவதற்கான தடை அமலுக்கு வரவிருக்கிறது. இதுகுறித்து இலங்கையின் பாதுகாப்புத்துறை அமைச்சர், தொடக்கத்தில் இலங்கை இஸ்லாமியப் பெண்கள், புர்கா அணியவில்லை. இது சமீபத்தில் வந்த மதத் தீவிரவாதத்தின் அடையாளம். எனவே அதனை நாங்கள் கண்டிப்பாகத் தடை செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 1,000 இஸ்லாமியப் பள்ளிகளை மூடவும் இலங்கை அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சர், "யார் வேண்டுமானாலும் பள்ளி தொடங்கலாம், எதை வேண்டுமானாலும் கற்பிக்கலாம் என்பதை அனுமதிக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் இந்த முடிவுகள் அந்தநாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்