நடிகை ஸ்ரீதேவி உயிரிழப்பதற்கு சில மணிநேரம் முன்னால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment

Sridevi

தமிழ்த்திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னாளில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரீதேவி. ஒரு தமிழ்ப் பெண்ணாக பிறந்தாலும், பாலிவுட் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இடத்தையும் பிடித்தவர், அங்கேயே செட்டிலும் ஆனார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisment

இந்நிலையில், ஸ்ரீதேவி - போனி கபூரின் 22ஆம் திருமண நாளான நேற்று, ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்களை வீடியோ காட்சியாக போனி கபூர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று எங்களது 22ஆவது திருமண தினம். வாழ்வே... என் மனைவி, என் ஆன்மா, என் காதலின் மறுவடிவம், கருணை... உன் மகிழ்ச்சி நிறைந்த நினைவுகள் என்னுள் என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கும்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.