/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/srilankn.jpg)
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திஸநாயக வெற்றி பெற்றார். அதன்படி, இலங்கையின் 9வது அதிபராக அவர் பதவியேற்று பொறுப்பு வகித்து வருகிறார். இதனையடுத்து நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், அநுர குமார திஸநாயகவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இலங்கையின் அதிபராக அநுர குமார பதவியேற்ற பிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த அநுர குமாரவை நேற்று (15-12-24) மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அதிபர் அநுர குமாரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று (16-12-24) பிரதமர் மோடியை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம், இலங்கை தமிழர்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் ஆகியவற்றை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக, இலங்கை அதிபர் அநுர குமார திஸநாயகவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)