ADVERTISEMENT

ஐந்து சதவீத ஜி.எஸ்.டியுடன் கூடிய ஸ்புட்னிக் V தடுப்பூசியின் விலை அறிவிப்பு!

01:46 PM May 14, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, இந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரு தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்தநிலையில், சமீபத்தில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ஸ்புட்னிக் V தடுப்பூசி இதுவரை இரண்டு கட்டங்களாக இந்தியா வந்துள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த வாரம் இந்தியா முழுவதும் கிடைக்கும் என மத்திய அரசு நேற்று (13.05.2021) அறிவித்தது. இந்தநிலையில், ஸ்புட்னிக் V தடுப்பூசி, இந்தியாவில் முதல்முறையாக ஹைதராபாத்தில் ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனை, ரஷ்யா நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசியைத் தயாரிக்கும் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ், ஸ்புட்னிக் V தடுப்பூசி இந்தியாவில் 995.40 ரூபாயில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை 948 என்றும், 5 சதவீத ஜி.எஸ்.டியோடு சேர்த்து தடுப்பூசியின் மொத்த விலை 995.40 என்றும் தெரிவித்துள்ள அந்நிறுவனம், இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகையில், தடுப்பூசி விலை மேலும் குறையும் எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT