/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mp-1-im.jpg)
போலி மதுபானம் குடித்த12 பேர் மத்திய பிரதேசமாநிலத்தில்உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேசமாநிலத்தின் மான்பூர் பிருத்வி, பஹாவலி ஆகிய கிராமங்களை சேர்ந்தசிலர், போலி மதுபானத்தை அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவர்களில்12 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த சம்பவம்தொடர்பாக ஒருவரை கைதுசெய்துள்ளபோலீஸார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், போலி மதுபானம் வேறு எங்கெங்கு விற்கப்படுகிறது எனவிசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம்குறித்துபேசியுள்ள மத்திய பிரதேசமுதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்த போலி மதுபானசம்பவம்குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதற்குகாரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு, அந்த கிராமங்கள் அடங்கிய மாவட்டமான மோரேனாவின் கலால் அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)