spread of Nipah virus; Public shutdown notice

Advertisment

கேரளாவில் நிபா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.

பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மருத்துவ கவுன்சில் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சிறுவனுடன் தொடர்பில் இருந்த 214 பேரில் 60 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதில் 14 பேருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவன் வசித்து வந்த மலப்புரம் பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisment

தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் கேரளாவில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்றுவந்த 68 வயது முதியவர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.