Advertisment

'ஆடைகளைக் களைய வேண்டும்' - நடிகரின் சர்ச்சை பேச்சுக்கு ஸ்பாட் பனிஷ்மென்ட்

 Spot Punishment for Actor's Controversial Speech 'Should Remove Clothes'

கன்னடத்திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தர்ஷன். இவர் அண்மையில் கொடுத்திருந்த பேட்டி ஒன்றில் 'அதிர்ஷ்ட தேவதை வீட்டுக்கு வந்தால் அவருடைய ஆடைகளைக் களைய வேண்டும்' எனப் பேசியதுசர்ச்சையைஏற்படுத்தியிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் எழுந்து வந்தன.

Advertisment

இந்நிலையில் ஹோஸ்பேட்டை பகுதியில் நடைபெற்ற கிராந்தி என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் தர்ஷன் கலந்து கொண்டார்.அப்பொழுது நடிகை ரஷிதா ராம் மேடையில் 'கிராந்தி' திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த நடிகர் தர்ஷன் மீது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் குறி வைத்துகாலணியால் தாக்கினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சர்ச்சை பேச்சுக்கு மக்கள் ஸ்பாட்டிலேயே பனிஷ்மென்ட் கொடுத்துவிட்டதாக இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

actor Movie
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe