SPORTS AWARDS UNION MINISTER PRESS MEET AT DELHI

மேஜர் தியான்சந்த் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மரியாதைசெலுத்தினார்.

Advertisment

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, விளையாட்டுத்துறை விருதுகளுக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனா விருதுக்கான பரிசு ரூபாய் 15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூபாய் 25 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Advertisment

இதனிடையே, கேல் ரத்னா, அர்ஜுனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா இன்று காணொளியில் நடக்கிறது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஒலிம்பிக் சங்க தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.