Advertisment

சானியா மிர்சாவின் பெயரை பங்கம் செய்த ஆந்திர விளையாட்டுதுறை!

ஆந்திராவில் மாநிலம் விசாகப்பட்டிணத்தில் தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் பொருட்டு உலக அளவில் புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களயும், அவர்களை பற்றிய விவரங்களையும் விளம்பர பலகையாக நகரின் முக்கியமான பகுதிகளில் வைத்திருக்கிறார்கள். அதில் விசாகப்பட்டிணம் கடற்கரை பகுதி அருகே வைக்கப்பட்ட பதாகை ஒன்றில் டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்ஸாவின் புகைப்படத்தை போட்டு பெயர் பி.டி.உஷா என்று போட்டிருக்கிறார்கள். விளையாட்டு பகுதியில் டென்னிஸ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. பி.டி.உஷா ஓட்ட பந்தய வீராங்கனை ஆவார்.

Advertisment

bjk

இந்த பெயர் குழப்பம் கொண்ட போஸ்டரை யாரோ புகைப்படம் எடுத்து இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தெலுங்கு திரைப்பட பிண்ணனி பாடகியான ஸ்மிதா அதை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அதற்கு அவரது ரசிகர் ஒருவர் இவங்க பி.டி.உஷாவா? நான் இத்தனை நாளா சானியா மிர்ஸான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேனே? என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisment
sania mirza
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe