Advertisment

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தால் பரபரப்பு!

spicejet plane landed in Pakistan causing excitement!

துபாய்க்கு சென்றுகொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு (SpiceJet) சொந்தமான பி737 என்ற விமானம் (SpiceJet B737), இன்று (05/07/2022) காலை தலைநகர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. அப்போது, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானத்தின் இண்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக உள்ளனர்; அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது" என்றார்.

Pakistan dubai spicejet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe