Advertisment

spicejet

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணிகள் தங்கள் விமான டிக்கெட் கட்டணத்தை மாதாந்திர தவணை முறையில் செலுத்தும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை 3, 6, அல்லது 12 தவணைகளில் செலுத்தலாம்.

Advertisment

இதில் மூன்று தவணைகளாக கட்டணத்தை செலுத்துபவர்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் ( வட்டி) கிடையாது என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த திட்டத்தில் சேர பயணிகள், தங்களது பான்எண்ணையும், ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடியைசமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் டிக்கெட் தொகையின் முதல் தவணையையுபிஐ ஐடி மூலம் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள தவணைகள் அதே யுபிஐ ஐடியிலிருந்து பிடித்துக் கொள்ளப்படும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.