Special Session of Parliament in September

Advertisment

செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததும், அதனைத்தொடர்ந்து நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் குளிர் காலக் கூட்டத் தொடர் நடைபெறுவது வழக்கம். இந்த சூழலில் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட உள்ளது குறிப்பிடத்தக்கது.