Skip to main content

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டத் தொடர்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Special Session at New Parliament Building

 

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்தப் போவதாக பல வருடங்களாகவே மத்திய பா.ஜ.க. அரசு சொல்லி வருகிறது. இந்நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

 

அதே நேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 இல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கூட்டத் தொடரில் 5 அமர்வுகள் நடைபெற உள்ளன. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நம் நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடரின் முதல் அமர்வு பழைய நாடாளுமன்றத்தின் கட்டடத்தில் நடைபெறும் எனவும், விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 19 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெறும் 4 அமர்வுகள் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்