Skip to main content

கரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை... சீனாவுக்கு செல்லும் இந்தியாவின் சிறப்பு விமானம்...

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

கரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வருவதற்காக சிறப்பு விமானம் சீனா செல்கிறது.

 

special flight to china will depart from delhi

 

 

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த கரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவிலிருந்து படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக சீனாவின் உகான் நகரத்திற்கு சென்று அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக சிறப்பு விமானம் உகான் நகருக்கு செல்கிறது. நாளை மதியம் 400 இந்தியர்களுடன் இந்த விமானம் இந்தியா திரும்பவுள்ளது. சீனாவிலிருந்து அழைத்துவரப்படும் 400 பெரும் 14 நாட்கள் டெல்லியிலேயே மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்