புதுச்சேரி யூனியன் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சபாநாயகர் செல்வம் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை 3 உறுப்பினர்கள் ஏற்கனவே வழங்கியிருந்தனர்.
இன்றைய கூட்டத்தில் அந்த பிரச்சனை கிளம்பியது. முதலில் மூன்று எம்எல்ஏக்கள் சபாநாயகர் மீது கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு விவாதம் நடத்த வேண்டும். அதுவரை துணை சபாநாயகரை கொண்டு சட்டமன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டுமென சுயேட்சை எம்எல்ஏ நேரு போர்க்கொடி தூக்கினார்.
இதனால் சட்டமன்ற கூட்டத்தில் இருந்து சுயேட்சை எம்எல்ஏ நேருவை சஸ்பெண்ட் செய்ததுடன்,அவரை வெளியேற்ற சட்டசபை காவலர்களுக்கு சபாநாயகர் செல்வம் உத்தரவு. இதனால் சட்டசபை காவலர்கள் அவரை வெளியேற்றினர்.